star4. அணுசக்தி ஒப்பந்தம் - உரத்த சிந்தனைகள்
123 ஒப்பந்தம் தொடர்பான இடதுசாரி (நந்திகிராம் பிரச்சினையைத் தொடர்ந்து சற்று தடம் புரண்டுள்ள) எதிர்ப்பும், பிஜேபியின் நிலையும், காங்கிரஸின் இரண்டுங்கெட்டான் நிலைமையும் அனைவரும் அறிந்தது தான். சோனியா அம்மையார் சமீபத்தில் திருவாய் மலர்ந்து, "இந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்கள், நாட்டின் வளர்ச்சிக்கு எதிரிகள்" என்று கூறியதை அடுத்து, ஒரு புள்ளி விவரத்தை ஆராய்வது அவசியமாகிறது.
ஆகஸ்ட் 2006 திட்டக் கமிஷன் அறிக்கை ஒன்று, 2031-32 வரை இந்தியாவின் ஆண்டொன்றுக்கான 8 சதவிகித GDP தொடர் வளர்ச்சிக்கு அவசியம் என்று கருதும் 11 வகை எரிபொருள் கலப்புகள் (Fuel Mix) தரவல்ல சாதக/பாதகங்கள் குறித்துப் பேசும்போது, இன்றிலிருந்து 2031-32 வரை இந்தியாவின் அணுசக்தித் திறன் 20 மடங்காக உயர்ந்தாலும் நாட்டின் மொத்தத் தேவையில் அணுசக்தியின் பங்கு 4-6.4% மட்டுமே என்று தெளிவாக குறிப்பிடுகிறது. இந்திய அணுசக்திக் கழகத்தின் தலைவரான அனில் ககோத்கரும் இவ்வறிக்கை தயாரித்த குழுவில் இடம் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது!
அதாவது, அணுசக்தி எக்காலத்திலும் நம் நாட்டின் எனர்ஜி தேவைகளுக்கு தீர்வாகாது என்பது நிதர்சனமான உண்மை. ஆனால் காங்கிரஸ் கட்சியும், பிரதமரும் 123 ஒப்பந்தம் ஒன்றே நம் நாட்டின் நெடுங்கால மின்சக்தி பற்றாக்குறைக்கு ஒரே தீர்வு என்று கூறுவது பொதுமக்களை ஏமாற்றும் தந்திரோபாயம் அன்றி வேறென்ன? உண்மையில் பாதுகாப்புத் தொடர்பான நமது அணுசக்தி சுதந்திரத்தை அமெரிக்காவிடம் அடகு வைக்கும் முயற்சி இது என்பது தெளிவு! அமெரிக்காவுடன் பெரியண்ணன்-தம்பி வகை உறவு நமக்கு நிச்சயம் தேவையில்லை.
ஒப்பந்தத்திற்கு எதிரான கருத்துக்களை (குறிப்பாக, Hyde Act பற்றிய சந்தேகங்களை) அரசு நேர்மையாக ஆராயாமல் இருப்பதும், பிரதமர் ஒப்பந்தத்தை விட்டுக் கொடுக்காமல் பேசி வருவதும், ஒப்பந்தம் நிறைவேறாமல் போவதை தனது தனிப்பட்ட தோல்வியாக பிரதமர் கருதுவதால் இருக்கலாம். சமீபத்தில் பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் கூட, பிரதமர் பங்கு கொண்டு எதுவும் கூறாதது, சிறுபிள்ளைத்தனமான பிடிவாதமாகத் தான் தோன்றியது.
போக்ரான்-II வாயிலாக இந்தியாவை அணுசக்தி நாடாக அறிவித்த பிஜேபியை, ஒப்பந்தத்திற்கு ஆதரவாக (பிஜேபியின் இடதுசாரி கொள்கைகளுக்கு எதிரான நிலைப்பாட்டை சாமர்த்தியமாக பயன்படுத்தி) இட்டு வர மறைமுக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவின் அமெரிக்கத் தூதர் முல்போர்ட், சமீபத்தில் அத்வானியை சந்தித்தது குறிப்பிட வேண்டியது.
சமீபத்தில், 123 ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் முக்கியப் பங்கு வகித்த நிக்கோலஸ் பர்ன்ஸ், "இன்னும் 20-30 ஆண்டுகள் கழித்து, பல அமெரிக்கர்கள், அமெரிக்காவின் இரண்டு அல்லது மூன்று முக்கியக் கூட்டாளிகளில் ஒன்றாக இந்தியாவையும் (ஜப்பான், யுரோப்பிய கூட்டமைப்பு போல) கருதுவார்கள்" என்று கூறியிருப்பது அமெரிக்க நோக்கத்தை தெளிவாக்குகிறது! இந்த ஒப்பந்தம் மூலம், தனக்கான சாதக/பாதகங்கள் குறித்து அமெரிக்கா தெளிவாகவே உள்ளது. ஆனால், நம் அரசோ, ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்களுடன் அனாவசிய சச்சரவு செய்து கொண்டும், வீட்டுக் கணக்கையும் சரிவரச் செய்யாமலும், எப்படியாவது ஒப்பந்தத்தை நிறைவேற்றி, அமெரிக்காவின் அடிவருட அலை பாய்கிறது!
அப்படியே அணுசக்தி ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தாலும், அணு ஆலைக்கு பொருட்களை விற்கும், பெரும்பாலும் தனியார் வசம் உள்ள, அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவுக்கு அவற்றை விற்பனை செய்ய முன் வர மாட்டார்கள். ஏனெனில், அணு ஆலையில் விபத்து ஏற்பட்டும் பட்சத்தில், பாதிக்கப்பட்டவர்க்கு நஷ்ட ஈடு என்று வரும்போது, அந்த நிறுவனங்கள் பெரும்பாதிப்புக்கு (யூனியன் கார்பைட் விவகாரம் போல) உள்ளாகும் சூழல் நிலவுகிறது. இந்தியாவில், அம்மாதிரி நஷ்ட ஈடுக்கு உச்சவரம்பை நிர்ணயிக்கும் சட்டம் இயற்றப்படவில்லை. ஆனால், அரசு கட்டுப்பாட்டில் உள்ள ரஷிய நிறுவனங்களுக்கு அந்தப் பிரச்சினை இல்லை என்றே கூறலாம். அதனால், ரஷிய நிறுவனங்களே, பெரும்பான்மையான இந்திய அணுசக்தி காண்ட்ராக்டுகளை வெல்ல வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஆகவே, கம்யூனிஸ்ட்கள் 123 ஒப்பந்தம் குறித்து அவ்வளவு டென்ஷன் ஆக வேண்டியதில்லை :)
என்றென்றும் அன்புடன்
பாலா

2 மறுமொழிகள்:
//அமெரிக்காவுடன் பெரியண்ணன்-தம்பி வகை உறவு நமக்கு நிச்சயம் தேவையில்லை.//
கூட்டுக் களவானியுடன் நமக்கு எதற்கு உறவு? அமெரிக்கா தன் சுயநலத்திற்காக நம்மை பயன்படுத்தி கொள்ளும். தேவையில்லை என்றால் நம்மை தூக்கி எறியவும் தயங்காது. இந்த ஒப்பந்தம் போட்டால் நம் வெளியுறவுக் கொள்கையை அமெரிக்காவிற்கு அடகு வைப்பது போல தான். அமெரிக்கா ஈரானுடன் போரிட்டால் இந்தியா தானாக அமெரிக்காவை ஆதரிக்கும். தேவையா இது நமக்கு?
இந்த களேபரத்தில் நாம் இழந்து நிற்பது ரஷ்யா என்ற நீண்ட கால நண்பனை. மன்மோகன் சிங்கின் கண்களுக்கு ரஷ்யா தெரியாமல் போனது ஏனோ தெரியவில்லை? நமக்கு சோதனையான காலகட்டத்தில் எல்லாம் ரஷ்யா தான் கூட இருந்திருக்கிறது. இன்று ரஷ்யா விழ்ந்தவுடன் அதனை கண்டுகொள்ளாமலிருப்பது நமக்கும் அமெரிக்காவின் ஓதம் அடித்துவிட்டதோ என்னவோ? :(
சீனு,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
இந்த ஒப்பந்தம் இல்லாவிட்டால், குடி முழுகி விடாது என்பது தான் நான் சொல்ல வந்தது !
பிரதமர் இதை ஒரு கௌரவப் பிரச்சினையாகப் பார்ப்பது இன்னொரு விநோதம் !
Post a Comment